Wednesday, January 6, 2010

'வம்சி'யில் நாசர்

இப்புத்தக கண்காட்சி தொடங்கியதிலிருந்து இன்றுவரை பல்வேறு
ஆளுமைகள் 'வம்சி'க்கு வந்து உரையாடி புத்தகங்கள் வாங்கி,
எங்கள் ரேக்குகளைப் பார்த்து அதிசயித்து 'எங்க செய்தீங்க'
எனக் கேட்டு எங்கள் மூன்று மாத வலியைக் கொஞ்சம் மறக்க
செய்திருக்கிறார்கள்.
நான் இன்றும் சென்னைப் பக்கமே போக முடியலை. இங்கிருக்கும்
ஒவ்வொரு நாளும் ஒரு புதுப் புத்தகத்தை முடித்தணுப்ப முடிகிறது.
9,10 இரு நாட்களில் மட்டும்தான் புத்தக அரங்கில் இருக்க முடியும் போல.
அவ்வப்போது ஷைலஜாவும், ஜெயஸ்ரீயும் சின்ன சின்ன
விஷயங்களுக்கெல்லாம் உற்சாகப்பட்டு தொலைபேசியில்
என்னை அழைத்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள், நேற்று
ஒரு பெண் மதியம் 2 மணியிலிருந்து 2 மணிவரை 'வம்சி'யிலேயே
காத்திருந்து 'சூர்ப்பனகை' (கெ.ஆர். மீரா-தமிழில் : கே.வி. ஷைலஜா)
தொகுப்பு வந்தவுடன் வாங்கிப் போயிருக்கிறார். இத்தனை எதிர்பார்ப்புக்கு
பரிசாக பணம் வாங்காமல் அத்தொகுப்பை ஷைலஜ கையெழுத்திட்டு தந்ததற்கு
அப்பெண் மிக நெகிழ்ந்து ஷைலஜாவின் கைப்பிடித்து தன் நன்றியை
ஸ்பரிசத்தால் பகிர்ந்து கொண்டது........
நேற்று நண்பர் நாசர் தொலைபேசியில் அழைத்து உங்க ஸ்டால் நோம்பர்
என்னவென்று கேட்டு, மிக முக்கியமான புத்தகங்களை வாங்கி போயிருக்கிறார்.
அப்போது எதேச்சையாக அங்கு வந்த ஆர்.ஆர். சீனிவாசன் எடுத்த புகைப்படங்கள் இவைகள்.







இப் புகைப்படங்களில் மட்டுமே 'வம்சி' யின் ரேக்குகளின் எளிமையான
அழகை தரிசிக்க முடிந்தது ஏன்னென்றால் அப்படி இருக்கிறதுச் சூழல்....

4 comments:

  1. I am happy to hear this news, Thanks for sharing.

    Hey your boks are more worrth than you think since you are in Tiruvannamalai its difficult to market.

    If possible try to open a branch or tie up with partner in Chennai. It would be easy to market.

    Also try to have epurchase facility for your books.

    I read in Dinamani or Murasoli that Cabinet Minister (min of state) Jagathratchakan too visited to your stall.

    ReplyDelete
  2. பவா,

    வம்சியின் இவ்வருட வெளியீடுகள் யாவும் என் விருப்ப பட்டியலில் சேர்ந்து கொண்டன.

    வேலு சரவணனை குறித்து இலக்கிய இதழ்களில் கிடைத்த அறிமுகம் அவர் மீது பெரும் மதிப்பை வர செய்தது.அவரின் "தங்க ராணி"
    நான் வாங்க விரும்பும் முக்கிய நூல்.

    வம்சி அரங்கின் புதுமையான அமைப்பு அழகாய் உள்ளது.

    தரமான புத்தகங்களை தொடர்ந்து வெளியிடுவதற்கு நன்றி.

    ReplyDelete
  3. உங்கள் அனைவரின் உழைப்பிற்கும் அருமையான வரவேற்புக் கிடைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி! புத்தகத்தின் அட்டைப் படங்கள் அருமையாக உள்ளன. "வம்சி புக்ஸ்"-க்கு விரைவில் ஒரு இணையத் தளத்தை உருவாக்குங்கள்.

    புத்தகக் கண்காட்சிக்கு வரும் போது உங்கள் அரங்கிலேயே நிறைய முக்கியமான புத்தகங்கள் வாங்க வேண்டியுள்ளன.

    ReplyDelete
  4. I visited ' VAMSI' book stall on the 7th Jan.

    I was really thrilled to see so many new releases.

    The books are well designed and printed and surprisingly reasonably priced compared to the other publishers.( C-rea for example..their rates are very exorbitant and you achieved to give the readers the similar finishing at a very low price)

    I am going to be in Thiruvannamalai on the 22nd Jan. Visiting your publishing house is one of my main program. Good work keep it up... my best wishes

    ReplyDelete