Thursday, March 3, 2011

வம்சி இரண்டு நூல்கள் வெளியீடு - திருவண்ணாமலை


12-02-2011 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற பவாவின் 19 டி.எம். சாரோனிலிருந்து, மற்றும் ஷைலஜாவின் தென்னிந்திய சிறுகதைகள் நூல்கள் வெளியீட்டு விழா - காணொளி (Video)


குறிப்பு: வீடியோ 1 மணி நேரம், 20 நிமிடங்களுக்கு மேலாக ஓடக்கூடியது. எனவே வீடியோவை தொடர்ச்சியாக பார்க்க குறைந்த பட்சம் (532 KBPS) 20 நிமிடம் காத்திருந்து பின்னர் ப்ளே செய்யவும்.

1 comment:

  1. எனது மின் நிலையத்தின் கடலோரத்தில் மெல்ல நடந்துகொண்டிருந்தேன், இரண்டு புத்தக வெளியீட்டு விழாவின் இரண்டு பாகத்தை (ஒலி ஒளி) பார்த்துவிட்டு கொஞ்சம் நடந்தால் தேவலை என்று தோன்றியது, மனமெங்கும் ஒரு அழுத்தமான சோகம், அதன் கூடவே ஒரு தாங்கமுடியாத பரவசமான மகிழ்ச்சி இரண்டும் கலந்த ஒரு கவலை என்னை எனது கால் போன போக்கில் நடக்கவைத்தது.
    பாரதி கிருஷ்ணகுமார் ஒரு நகைச்சுவையாக தொடங்கி கடைசியில் அப்பாவில் கொண்டு வந்து கண்களை கலங்க வைத்துவிட்டு அமர்ந்திருந்த நிலையில் மேற்கொண்டு என்னால் தொடரமுடியாமல் இப்படி நடந்து கொண்டிருக்கிறேன்.
    பவா, தாங்கமுடியாத சந்தோஷம் என்று சொல்வார்களே அது இதுதான் போலும். ஒரு ஆழமான பழய நினைவுகளின் சோகம் மெல்ல தூண்டப்படும்போது மனதுக்குள் ஒரு உணர்வு அதை சந்தோஷமாக உணரமுடிந்தாலும் தாங்கமுடியாமல் அதை சமாளித்துக்கொள்ள இயற்கையைத்தேடி ஓடவேண்டியிருக்கிறது. அப்பா எனக்குள் ஏற்படுத்திய பாதிப்புகளை மெல்ல நினைவு படுத்தியது. உங்கள் எழுத்தைப்பற்றி பேசியதே இவ்வளவு ஆழமான உணர்வுகளை ஏற்படுத்தியது என்றால் எழுத்து எவ்வளவு ஆழமாக இருக்கும் என்று புரிகிறது.
    உணர்வுகளை எழுப்ப கூடிய விழாவாக இருந்தது மொத்தவிழாவும் என்று தோன்றுகிறது, புத்தக விழாக்கள் ஒரு சம்பிரதாய செயல்களாக இருக்கிறதைதான் நாம் பார்த்திருக்கிறோம், ஒரு வெட்டவெளியில் உணர்வுகளை எழுப்பி அதனூடே ஒரு வெளியீடு என்றுதான் இதை சொல்லமுடியும்.
    வாத்திய கருவிகள் இல்லை என்றாலும் வேடிக்கை மனிதர்கள் போல் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று தொடங்கி மண்ணெண்ணை விளக்கில் பாட்டுக் கட்டிப்பாடிய அந்த அன்பரின் இசை உண்மையிலேயே சிறப்பாக இருந்தது. நல்ல சந்தம்.
    எட்டாத கனிக்கு கொட்டாவி விட்ட பாடல் மிக சுகம், அவருக்கு எனது அன்பும் பாராட்டுகளும். திரு.கருணா அவர்களின் பேச்சு மிக அன்யோன்யமாக இருந்தது, தங்களுடனான நட்பின் ஆழம் புரிந்தது. திரு. காஞ்சனா சீனிவாசன் அவர்களின் பேச்சும் அவர் பரிசலித்த மரக்கன்றும் பார்க்க ஒரு வித்தியாசமான உணர்வுதான் ஏற்பட்டது. நல்ல பல சம்பவங்களை பார்வைகளை மிக அழகாக கூறினார், ஓவியர்கள், புகைப்பட கலைஞர்களின் இடையே தங்களுக்கு உள்ள ஒரு ஆழமான தொடர்பை அவர் விளக்கி கூறியது அருமை, உண்மைதான் என்பது அவர் கூறிய பின்னர் எனக்கும் உணரமுடிந்தது.
    மற்ற பாகங்களையும் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்கிறேன், உங்களுடன் உடனே பேச வேண்டும் என்று தோன்றியது, அதனால் உங்கள் தொலைபேசிக்கு அழைத்தேன். உங்கள் தோலைபேசி வம்சியிலேயே விட்டுபோனதை தெரிவித்தார்கள், அதனால் எழுதிவிட்டேன் இங்கே
    நன்றி உங்களுக்கும் திருமதி ஷைலஜா அவர்களுக்கும்

    ReplyDelete