Friday, December 28, 2012

Dialogue உரையாடல் மையம் திறப்பு


Dialogue உரையாடல் மையம் திறப்பு

    
    எங்கள் பல வருட கனவு கிருஸ்துமஸ் அன்று நிறைவேறியது. தொடர்ந்து சந்திக்கவும், உரையாடவும், திரையிடவுமான ஒரு அரங்கு, வம்சி புக்ஸ் மாடியில், கடந்த 25-ல் எழுத்தாளர் கல்பட்டா நாரயணனால் திறந்து வைக்கப்பட்டது. எழுத்தாளர் ஜெயமோகன் காந்தி பற்றிய தன் உரையாடலால் முதல் விவாதத்தைத் துவங்கி வைத்தார்.




எல்லா தரப்பிலிருந்தும் எழுபது எண்பது பேர் வந்திருந்தார்கள். சரியாக ஐம்பது  இருக்கைகளே இருந்ததால் சிலர் கீழே நின்று உரையைக் கேட்டார்கள். சங்கடமாயிருந்தாலும் சந்தோஷமாயிருந்தது. ஓவியர் சீனுவாசன் எங்களுக்கு ஒவ்வொன்றும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐந்து ஓவியங்களை பரிசளித்திருந்தார். அவைகள் கூட்ட அரங்கை வேறொன்றாய் மாற்றிக் காட்டியது.










நான் எப்போதும் அடங்காத பிடிவாதமுள்ள குழந்தையைப்போல நண்பர் கருணாவிடம் அடம்பிடிப்பேன். அவரும் அதைஒரு புன்னகையுடன் அங்கீகரிப்பார். அப்படித்தான் இதையும் அடம்பிடித்து சாதித்தேன்.
   

 அடுத்த நிகழ்வுக்கு தயாரகிறது Dialogue. இடையே வேறு யாரேனும் நிகழ்சிகள் நடத்த விரும்பினாலும் இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

ஷைலஜா - 9444867023,  கார்த்தி - 9443542842, முருகன் - 9952405818

4 comments:

  1. வாழ்த்துக்கள் பவா!

    ReplyDelete
  2. இன்று,(31.12.12) ஜெயமோகனின் வலைதலத்தில், உங்களோடு இருந்த அனுபவத்தை பதிந்திருக்கிறார். எனக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சி. நம் ஊர்க்காரர் என்பதற்காக மட்டுமல்ல, நம்மோடு பழகியவர் என்கிற விதத்திலும்!

    ReplyDelete
  3. இன்று,(31.12.12) ஜெயமோகனின் வலைதலத்தில், உங்களோடு இருந்த அனுபவத்தை பதிந்திருக்கிறார். எனக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சி. நம் ஊர்க்காரர் என்பதற்காக மட்டுமல்ல, நம்மோடு பழகியவர் என்கிற விதத்திலும்!

    ReplyDelete